Saturday, November 3, 2012

                   Sri Subramanya Astotram  (ஸ்ரீ சுப்ரமண்ய அஸ்டோத்திரம்)




Tamil Lyrics :

1. ஓம் ஸ்கந்தாய நம ஹ
2. ஓம் குஹாய நம ஹ
3. ஓம் ஷண்முகாய நம ஹ
4. ஓம் பால நேத்ரஸூதாய நம ஹ
5. ஓம் ப்ரபவே நம ஹ
6. ஓம் பிங்களாய நம ஹ
7. ஓம் க்ருத்திகா ஸூனவே நம ஹ
8. ஓம் சிகிவாஹனாய நம ஹ
9. ஓம் த்விஷட் புஜாய நம ஹ
10. ஓம் த்விஷண் நேத்ராய நம ஹ
11. ஓம் சக்தி தராய நம ஹ
12. ஓம் பிஸிதாஸ ப்ரபஞ்சனாய நம ஹ
13. ஓம் தாரகாஸூர ஸம்ஹாரிணே நம ஹ
14. ஓம் ரஷோபல விமர்த்தனாய நம ஹ
15. ஓம் மத்தாய நம ஹ
16. ஓம் ப்ரமத்தாய நம ஹ
17. ஓம் உன்மத்தாய நம ஹ
18. ஓம் ஸூரஸைன்ய ஸூரக்ஷகாய நம ஹ
19. ஓம் தேவசேனாபதயே நம ஹ
20. ஓம் ப்ராக்ஞாய நம ஹ
21. ஓம் க்ருபாளவே நம ஹ
22. ஓம் பக்த வத்ஸலாய நம ஹ
23. ஓம் உமா ஸூதாய நம ஹ
24. ஓம் சக்தி தராய நம ஹ
25. ஓம் குமாராய நம ஹ
26. ஓம் க்ரெளஞ்சதாரணாய நம ஹ
27. ஓம் ஸேனான் யே நம ஹ
28. ஓம் அக்னிஜன்மனே நம ஹ
29. ஓம் விசாகாய நம ஹ
30. ஓம் சங்கராத்மஜாய நம ஹ
31. ஓம் சிவஸ்வாமினே நம ஹ
32. ஓம் கணஸ்வாமினே நம ஹ
33. ஓம் ஸர்வஸ்வாமினே நம ஹ
34. ஓம் ஸநாதனாய நம ஹ
35. ஓம் அனந்த சக்தயே நம ஹ
36. ஓம் அக்ஷோப்யாய நம ஹ
37. ஓம் பார்வதிப்ரிய நந்தனாய நம ஹ
38. ஓம் கங்கா ஸூதாய நம ஹ
39. ஓம் சரோத் பூதாய நம ஹ
40. ஓம் ஆஹூதாய நம ஹ
41. ஓம் பாவகாத்மஜாய நம ஹ
42. ஓம் ஜ்ரும்பாய நம ஹ
43. ஓம் ப்ரஜ்ரும்பாய நம ஹ
44. ஓம் உஜ்ரும்பாய நம ஹ
45. ஓம் கமலாஸன ஸம்ஸ்துதாய நம ஹ
46. ஓம் ஏகவர்ணாய நம ஹ
47. ஓம் த்விவர்ணாய நம ஹ
48. ஓம் திரிவர்ணாய நம ஹ
49. ஓம் ஸூமனோகராய நம ஹ
50. ஓம் சதுர்வர்ணாய நம ஹ
51. ஓம் பஞ்சவர்ணாய நம ஹ
52. ஓம் ப்ரஜாபதயே நம ஹ
53. ஓம் அஹஸ்பதயே நம ஹ
54. ஓம் அக்னிகர்பாய நம ஹ
55. ஓம் சமீகர்பாய நம ஹ
56. ஓம் விச்வரேதஸே நம ஹ
57. ஓம் ஸூரரீக்னே நம ஹ
58. ஓம் ஹரித்வர்ணாய நம ஹ
59. ஓம் சுபகராய நம ஹ
60. ஓம் வாஸவாய நம ஹ
61. ஓம் வடுவேஷப்ருதே நம ஹ
62. ஓம் பூஷ்ணே நம ஹ
63. ஓம் கபஸ்தினே நம ஹ
64. ஓம் கஹனாய நம ஹ
65. ஓம் சந்த்ரவர்ணாய நம ஹ
66. ஓம் களாதராய நம ஹ
67. ஓம் மாயாதராய நம ஹ
68. ஓம் மஹாமாயினே நம ஹ
69. ஓம் கைவல்யாய நம ஹ
70. ஓம் சங்கரீஸூதாய நம ஹ
71. ஓம் விச்வயோனயே நம ஹ
72. ஓம் அமே யாத்மனே நம ஹ
73. ஓம் தேஜோநிதயே நம ஹ
74. ஓம் அனாமயாய நம ஹ
75. ஓம் பரமேஷ்டினே நம ஹ
76. ஓம் பரப்ரஹ்மணே நம ஹ
77. ஓம் வேதகர்பாய நம ஹ
78. ஓம் விராட்ஸூதாய நம ஹ
79. ஓம் புளிந்த்கன்யாபர்த்ரே நம ஹ
80. ஓம் மஹாஸாரஸ்வத ப்ரதாய நம ஹ
81. ஓம் ஆச்ரிதாகில தாத்ரே நம ஹ
82. ஓம் சோராக்னாய நம ஹ
83. ஓம் ரோக நாசனாய நம ஹ
84. ஓம் அனந்தமூர்த்தயே நம ஹ
85. ஓம் ஆனந்தாய நம ஹ
86. ஓம் சிகண்டிக்ருத கேதனாய நம ஹ
87. ஓம் டம்பாய நம ஹ
88. ஓம் பரம டம்பாய நம ஹ
89. ஓம் மஹாடம்பாய நம ஹ
90. ஓம் வ்ருஷாகபயே நம ஹ
91. ஓம் காரணோ பாத்த தேஹாய நம ஹ
92. ஓம் காரணாதீத விக்ரஹாய நம ஹ
93. ஓம் அனீச்வராய நம ஹ
94. ஓம் அம்ருதாய நம ஹ
95. ஓம் ப்ராணாய நம ஹ
96. ஓம் ப்ராணாயாம பாராயணாய நம ஹ
97. ஓம் வ்ருத்த ஹந்த்ரே நம ஹ
98. ஓம் வீரக்னாய நம ஹ
99. ஓம் ரக்த ச்யாம களாய நம ஹ
100. ஓம் மஹதே நம ஹ
101. ஓம் ஸூப்ரஹ்மண்யாய நம ஹ
102. ஓம் குஹப்ரிதாய நம ஹ
103. ஓம் ப்ரஹ்மண்யாய நம ஹ
104. ஓம் ப்ராஹ்மண ப்ரியாய நம ஹ
105. ஓம் வம்ச விருத்திகராய நம ஹ
106. ஓம் வேத வேத்யாய நம ஹ
107. ஓம் அக்ஷய பலப்ரதாய நம ஹ
108. ஓம் மயூர வாஹனாய நம ஹ 

English Lyrics :


1.Om  Skandaya Namaha
   Hail Skanda! Vanquisher of the mighty foes!

2.Om  Guhaya Namaha
   Praise be to the Invisible Lord — He who
   abides in the hearts of devotees true!

3.Om  Shanmukhaya Namaha
   Praise be to the six-faced one!

4.Om  Balanetrasutaya Namaha
   Praise be to the Son of the Three-Eyed Siva!

5.Om  Prabhave Namaha
    Praise be to the Lord Supreme!

6 .Om  Pingalaya Namaha
    Praise be to the golden-hued one!

7.Om  Krittikasunave Namaha
   Hail to the Son of the starry maids!

8.Om  Shikhivahanaya Namaha
   Hail to the rider on the peacock!

9.Om  Dvinadbhujaya Namaha
   Hail to the Lord with the twelve hands!

10.Om  Dvinannetraya Namaha
     Hail to the Lord with the twelve eyes!

11.Om  Shaktidharaya Namaha
     Hail to the wielder of the Lance!

12.Om  Pisidasaprabhajanaya Namaha
      Praise be to the destroyer of the Asuras!

13.Om  Târakasurasamharine Namaha
      Praise be to the slayar of Târakasuran!

14.Om  Raksobalavimardanaya Namaha
      Praise be to the Victor of the Asuric forces!

15.Om  Mattaya Namaha
      Praise be to the Lord of felicity!

16.Om  Pramattaya Namaha
      Praise be to the Lord of bliss!

17.Om  Unmattaya Namaha
      Hail Oh passionate One!

18.Om  Surasainyasuraksakaya Namaha
      (Suralangasya Rakshithre Namaha) Hail
       Saviour of the Devas!

19.Om  Devasenapataye Namaha
      Hail Commander of the Heavenly hosts!

20.Om  Pragnya Namaha
      Hail, Lord of Wisdom!

21.Om  Kripalave Namaha
      Hail Compassionate One!

22.Om  Bhaktavatsalaya Namaha
      Lover of devout ones, Praise be to Thee!

23.Om  Umasutaya Namaha
      Son of Uma — Praise be to Thee!

24.Om  Shaktidharaya Namaha
      Mighty Lord—Praise be to Thee!

25.Om  Kumaraya Namaha
      Eternal youth—Praise be to Thee!

26.Om  Krauncadharanaya Namaha
      He who reft asunder the Kraunca Mount —
      Praise be to Thee!

27.Om  Senanye Namaha
      Praise be to the Army Chief!

28.Om  Agnijanmane Namaha
     To the effulgence of Fire, all Hail!

29.Om  Viskhaya Namaha
     To Him who shone on the astral Visakha –Hail him

30.Om  Shankaratmajaya Namaha
     Thou Son of Sankara — All Hail!

31.Om  Sivasvamine Namaha
     Thou Preceptor of Siva — All Hail!

32 .Om  Ganaswamine Namaha
      On Lord of the Ganas — All Hail

33 .Om  Sarvasvamine Namaha
      On Lord, God Almighty, All Hail!.

34.Om  Sanatanaya Namaha
      Oh Lord eternal, Praise be to Thee!

35.Om  Anantasaktaye Namaha
     Thou potent Lord, Praise be to Thee!

36.Om  Aksobhyaya Namaha
      Unsullied by arrows art Thou — Praise be to Thee!

37.Om  Parvatipriyanandanaya Namaha
      Thou beloved of Parvati, Praise be to Thee!

38.Om  Gangasutaya Namaha
      Oh, son of Goddess Ganga — Praise be to Thee!

39.Om  Sarodbhutaya Namaha
      Thou who did'st nestle in the Saravana Lake!

40.Om  Atmabhuve Namaha
      Thou Unborn Lord!

41.Om  Pavakatmajaya Namaha
      Thou who art born of Fire!

42.Om  Mayadharaya Namaha
      Energy Art Thou—Praise be to Thee!

43.Om  Prajrimbhaya Namaha
      Praise be to thee Auspicious One! (Blissful)!

44.Om  Ujjrimbhaya Namaha
      Praise be to the Invincible One!

45.Om  Kamalasanasamstutaya Namaha
      Praise be to the Lord extolled by Brahma!

46.Om  Ekavarnaya Namaha
      The one Word art Thou—All Hail!

47.Om  Dvivarnaya Namaha
      In Two Art Thou—All Hail!

48.Om  Trivarnaya Namaha
      Sri Kumara
      Sri Saktidhara
      Sri Subramanya
      Thou Art the Three—All Hail!

49.Om  Sumanoharaya Namaha
    Thou Stealer of pure hearts—All Hail!

50.Om  Caturvarnaya Namaha
     In four Art Thou—All Hail!

51.Om  Pancavarnaya Namaha
      In five letters Art Thou—All Hail!

52.Om  Prajapataye Namaha
      Father of all Creation—All Hail!

53.Om  Trumbaya Namaha
      Praise be to Thee, Oh Peerless One!

54.Om  Agnigarbhaya Namaha
      Thou who dost sustain the fire!

55.Om  Samigarbhaya Namaha
      Hail Thou who arose out of the Vanni flame!
      (Fire of the Suma tree)!

56.Om  Visvaretase Namaha
     Thou glory of the Absolute Paramasivam,-All Hail!

57.Om  Surarighne Namaha
      Oh, Subduer of the foes of the Devas, All Hail!

58.Om  Hiranyavarnaya Namaha
      Thou resplendent One, All Hail!

59.Om  Subhakrite Namaha
      Thou Auspicious One—All Hail!

60.Om  Vasumate Namaha
      Thou Oh Splendour of the Vasus— (a class of Gods) All Hail!

61.Om  Vatuvesabhrite Namaha
      Praise be to Thee, Oh lover of celibacy!

62.Om  Bhushane Namaha
      Thou Luminous Sun—All Hail!

63.Om  Kapastaye Namaha
      Thou Effulgence divine, All Hail!

64.Om  Gahanaya Namaha
      Thou Omniscient One—All Hail!

65.Om  Chandravarnaya Namaha
      Thou Radiance of the Moon — Praise be to Thee!

66.Om  Kaladharaya Namaha
      Thou who adorns the crescent—Praise be to Thee!

67.Om  Mayadharaya Namaha
      Engergy art Thou—Praise be to Thee!

 68.Om  Mahamayine Namaha
       Great Artist of Deception too art Thou, Praise be to Thee!

69.Om  Kaivalyaya Namaha
      Everlasting joy of attainment—Praise be to Thee!

70.Om  Sahatatmakaya Namaha
      Art all-pervading—All Hail!

71.Om  Visvayonaye Namaha
     Source of all Existence—All Hail!

72.Om  Ameyatmane Namaha
     Oh, Supreme Splendour, All Hail!

73.Om  Tejonidhaye Namaha
     Illumination divine—All Hail!

74.Om  Anamayaya Namaha
     Savior of all ills—All Hail!

75.Om  Parameshtine Namaha
     Thou art Immaculate Lord, Praise be to Thee

76.Om  Parabrahmane Namaha
      Thou Transcendant One, Praise be to Thee!

77.Om  Vedagarbhaya Namaha
      The Source of the Vedas art Thou, Praise be to Thee!

78.Om  Viratsutaya Namaha
     Immanent Art Thou in the Universe, Praise be to Thee!

79.Om  Pulindakanyabhartre Namaha
      Praise be to the Lord of Valli and Deivayanai

80.Om  Mahasarasvatavradaya Namaha
      Praise be to the source of Gnosis

81.Om  Asrita Kiladhatre Namaha
      Praise be to Him who showers grace on those who seek his solace!

82.Om  Choraghnaya Namaha
      Praise be to Him who annihilates those who steal!

83.Om  Roganasanaya Namaha
      Praise be to the divine Healer

84.Om  Anantamurtaye Namaha
      Praise be Thine whose forms are endless!

85.Om  Anandaya Namaha
      Praise be Thine, Oh Thou infinite Bliss!

86.Om  Shikhandikritagedanaya Namaha
      Praise be Thine, Thou Lord of peacock banner!

87.Om  Dambhaya Namaha
      Praise be Thine, Oh lover nature

88.Om  Paramadambhaya Namaha
      Praise be Thine, Thou lover of supreme exuberance!

89.Om  Mahadambhaya Namaha
      Praise be Thine, Oh Lord of lofty magnificence!

90.Om  Vrishakapaye Namaha
      Thou who art the culmination of righteousness—All Hail (Dharma)!

91.Om  Karanopatadehaya Namaha
     Thou who deigned embodiment for a cause—All Hail!

92.Om  Karanatita Vigrahaya Namaha
      Form transcending causal experience

93.Om  Anîshvarâya Namaha
     Oh Eternal peerless plentitude, All Hail

94.Om  Amritaya Namaha
      Thou Ambrosia of Life—All Hail!

95.Om  Pranaya Namaha
      Thou life of life, Praise unto Thee!

96.Om  Pranayamaparayanaya Namaha
      Thou support of all beings—Praise unto Thee!

97.Om  Vritakandare Namaha
      Praise unto Thee who subjugates all hostile forces!

98.Om  Viraghnaya Namaha
      Thou vanquisher of heroic opponents, Praise unto Thee!

99.Om  Raktashyamagalâya Namaha
      Thou art Love, and of crimson beauty—

100.Om  Mahate Namaha
        Oh Consummation of glory, All Praise to Thee!

101.Om  Subrahmanyaya Namaha
        We praise Thee, Oh effulgent Radiance!

102.Om  Paravaraya Namaha
        Oh Supreme (Sovereign) Goodness, Praise unto Thee!

103.Om  Brahmanyaya Namaha
       We praise Thee, luminous wisdom serene!

104.Om  Brahmanapriyaya Namaha
        Thou who art beloved of seers—Praise unto Thee!

105.Om  Loka Gurave Namaha
        Oh universal Teacher, All Praise to Thee!

106.Om  Guhapriyaya Namaha
        We praise Thee, Indweller in the core of our hearts!

107.Om  Aksâyaphalapradaya Namaha
        We praise Thee, Oh bestower of indestructible results ineffable!

108.Om  Shrî Subrahmanyaya Namaha
        We praise Thee, most glorious effulgent radiance!

        Om Saravanabava !!



        Om Saravanabava !!




Thursday, January 12, 2012

Lyrics of Some Ayyappa Songs sung by SriHari


தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும்
செய்த சகல குற்றங்களையும் பொறுத்துக் காத்து ரட்சித்து
அருள் புரிய வேண்டும் ஓம் சத்தியமாய் பொன்னு
பதினெட்டாம் படிமேல் வீற்றிருக்கும் ஓம் ஹரி ஹர சுதன்
ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா

நான் இப்பாடல்களின் வரிகளை இனையதளத்தில் தேடி கிடைக்காமல் போகவே என்னை போன்ற பலரும் இதை விரும்புவர் என்பதால் ஐயப்பனின் அருளால் இந்த பாட்டை கேட்டு கோண்டே type செய்தென் . அதனால் இதில் பிழை இருக்கும் சில வார்த்தைகல் புரியவில்லை எனினும் அதன் உச்சரிப்பு கேட்டு எழுதி இருக்கிரேன் . இதில் ஏதாவது பிழை இருந்தால் மன்னித்தருள வேண்டும். 


ஐயா ஐயா ஐயப்பா

ஐயா ஐயா ஐயப்பா அம்மையப்பன் நீயப்பா சரணமப்பா ஐயப்பா
பய்ய பய்ய ஐயப்பா வழினடத்தி செல்லப்பா சுவாமிகுரு ஐயப்பா
ஐயா ஐயா ஐயப்பா அரிசுவடி நீயப்பா சரணமப்பா ஐயப்பா
மெல்லமெல்ல உன்முகம் படிக்க வந்தொம் அப்பா ஐயப்பா சுவாமிகுரு ஐயப்பா
ஐயா ஐயா ஐயப்பா குருநாதன் நீயப்பா சரணமப்பா ஐயப்பா
உன் கைய கைய காட்டப்பா நல்லவழி ஏத்தப்பா சுவாமிகுரு ஐயப்பா
ஐயா ஐயா ஐயப்பா அடைமழையே நீயப்பா சரணமப்பா ஐயப்பா
கொஞ்சன்னெஞ்சொம் அழுக்கையும் கழுவி சுத்தம் செய்யப்பா சுவாமிகுரு ஐயப்பா
எங்ககுரு எங்கள் தங்ககுரு உங்கள் பாதம் பணிகிரோம் ஐயப்பா
சொன்னபடி நீங்கள் சொன்னவழி நாங்கள் நாடும் நடக்கிரோம் ஐயப்பா (2)
ஐயா ஐயா ஐயப்பா அம்மையப்பன் நீயப்பா சரணமப்பா ஐயப்பா
பய்ய பய்ய ஐயப்பா வழினடத்தி செல்லப்பா சுவாமிகுரு ஐயப்பா
சின்ன சின்ன மாலையாம் சிறுகமணிமாலையாம் சரணமப்பா ஐயப்பா
உன்னையென்நி போடையில் சீர்திருத்தும் வேலியாம் சுவாமிகுரு ஐயப்பா
சொக்கதங்கம் குருவடி சொன்னபடி நடக்கிரொம் சரணமப்பா ஐயப்பா
அக்கம்பக்கம் எல்லாமே ஐயப்பனா பாக்கரோம் சுவாமிகுரு ஐயப்பா
காலை மாலை வேலையில் அம்பலத்தில் வேலயாம் சரணமப்பா ஐயப்பா
நீலிமலை நாதமே நினைப்பில் வந்து ஆடுதாம் சுவாமிகுரு ஐயப்பா
தங்கமணி கோட்டையில் தவமிருக்கும் சுவாமியே சரணமப்பா ஐயப்பா
உங்க மனம் கோனாம நடப்பது எங்க ஆசையே சுவாமிகுரு ஐயப்பா
எங்ககுரு எங்கள் தங்ககுரு உங்கள் பாதம் பணிகிரோம் ஐயப்பா
சொன்னபடி நீங்கள் சொன்னவழி நாங்கள் நாடும் நடக்கிரோம் ஐயப்பா (2)
ஐயா ஐயா ஐயப்பா அம்மையப்பன் நீயப்பா சரணமப்பா ஐயப்பா
பய்ய பய்ய ஐயப்பா வழினடத்தி செல்லப்பா சுவாமிகுரு ஐயப்பா
தத்தி தத்தி நடந்திடும் குலத்துபுழை பாலனே சரணமப்பா ஐயப்பா
புத்தியெல்லம் உன்  பதம் அடகு வெச்சொம் அய்யனே சுவாமிகுரு ஐயப்பா
கொச்சிகலத்த சுவாமியே கோலம் பூண்ட நாதரே சரணமப்பா ஐயப்பா
அச்சுவெல்லம் போலவே அய்யா உன்னிடம் கரையிரோம் சுவாமிகுரு ஐயப்பா
கொத்து கொத்து மாலையாம் மார்பில் வாழும் சாமியே  சரணமப்பா ஐயப்பா
பக்தி கொண்டு பத்தியம் இருப்பதெல்லாம் சத்தியம் சுவாமிகுரு ஐயப்பா
உப்புகாரம் குறைக்குரோம் உன் சரணம் செர்க்கிரோம் சரணமப்பா ஐயப்பா
தப்பு தண்டா செய்யாம தவமிருந்து பழகுரோம் சுவாமிகுரு ஐயப்பா
எங்ககுரு எங்கள் தங்ககுரு உங்கள் பாதம் பணிகிரோம் ஐயப்பா
சொன்னபடி நீங்கள் சொன்னவழி நாங்கள் நாடும் நடக்கிரோம் ஐயப்பா (2)
ஐயா ஐயா ஐயப்பா அம்மையப்பன் நீயப்பா சரணமப்பா ஐயப்பா
பய்ய பய்ய ஐயப்பா வழினடத்தி செல்லப்பா சுவாமிகுரு ஐயப்பா
கருப்பசாமி உடன்வர காடு ஈரும் அய்யனே சரணமப்பா ஐயப்பா
வருத்தி வருத்தி உடல தான் சன்னதியா ஆக்குரொம் சுவாமிகுரு ஐயப்பா
கோவவீர வாவர தோழரான சுவாமியே சரணமப்பா ஐயப்பா
காமகோவ க்ரோதனமே தவுடுபொடி செய்கிரோம் சுவாமிகுரு ஐயப்பா
பத்து எட்டு பதினெட்டு படி வளரும் தெய்வமே சரணமப்பா ஐயப்பா
சொத்து பத்து எல்லாமே ஜோதி மயமாகுமே சுவாமிகுரு ஐயப்பா
அட்டசித்தி வளர்த்திடும் கட்டுமுடி காவலாம் சரணமப்பா ஐயப்பா
வட்டி மேல் வட்டி போல் உன் நினைப்பு வளருதே சுவாமிகுரு ஐயப்பா
எங்ககுரு எங்கள் தங்ககுரு உங்கள் பாதம் பணிகிரோம் ஐயப்பா
சொன்னபடி நீங்கள் சொன்னவழி நாங்கள் நாடும் நடக்கிரோம் ஐயப்பா (2)
ஐயா ஐயா ஐயப்பா அம்மையப்பன் நீயப்பா சரணமப்பா ஐயப்பா
பய்ய பய்ய ஐயப்பா வழினடத்தி செல்லப்பா சுவாமிகுரு ஐயப்பா
அச்சங்கோவில் ஓடையில் நீந்தி வரும் ஐயப்பா சரணமப்பா ஐயப்பா
சுத்தம் சுத்தம் என்பதே எங்கள் குரு மொழியப்பா சுவாமிகுரு ஐயப்பா
செங்கம்பட்டி ஓடையில் சிலம்பாடும் அய்யவே சரணமப்பா ஐயப்பா
அங்கம் எங்கும் சந்தனம் புனிதம் சொல்லுது ராசாவே சுவாமிகுரு ஐயப்பா
குட்டி குட்டிகோச்சாரம் நடக்கும் சாமி ஒய்யாரம் சரணமப்பா ஐயப்பா
பட்டி தொட்டி எல்லாமே பேசி வந்தோம் உன் சரணம் சுவாமிகுரு ஐயப்பா
வட்டம் வட்டம் யானவட்டம் போகுதப்பா எங்கள் சித்தம் சரணமப்பா ஐயப்பா
சாமி எப்பொ எப்பொ பள்ளிகட்டு ஏங்குதப்பா எங்கள் மனம் சுவாமிகுரு ஐயப்பா
சாமி சரணம் ஐயப்பா சரணம்
சாமி சரணம் ஐயப்பா...

பந்தளராஜா பரிமள வாசா



பந்தளராஜா பரிமள வாசா பனிமலை அருளும் ஐயப்பா சரணம் சரணம் எங்கள் ஐயப்பா
எங்குருநாதன் பூஜையிலே நீ எழுந்தருளும் செய்க ஐயப்பா சரணம் சரணம் எங்கள் ஐயப்பா
வன்புலி வளரும் எங்கள் பொன்மனி பாலா உன் பொன்னடி சரணம் ஐயப்பா சரணம் சரணம் எங்கள் ஐயப்பா
கன்னிகள் பூஜை கன்னியம் காக்க வந்தருள் செய்க ஐயப்பா சரணம் சரணம் எங்கள் ஐயப்பா
பம்பா நதியின் அன்பால் வளரும் பரமேஷ்வரனே ஐயப்பா சரணம் சரணம் எங்கள் ஐயப்பா
வெண்பால் கொடுத்த நெய்யால் வளர்த்த தீபங்கள் ஏர்பாய் ஐயப்பா ஐயப்பா சரணம் சரணம் எங்கள் ஐயப்பா
அம்புவில் ஏந்தும் அம்பாசுதனே அழுதையில் பாலா ஐயப்பா சரணம் சரணம் எங்கள் ஐயப்பா
உன் புகழ் பாடும் எங்களின் கீதம் கேட்டருள் புரிவாய் ஐயப்பா சரணம் சரணம் எங்கள் ஐயப்பா
அரிஹரசுதனே அடியவர் மனமே அறிவாய் வருவாய் (2)
ஓம் ஹரி ஓம் என பூதனாதமே தொழுவோம் (2)
பந்தளராஜா பரிமள வாசா கரிமலை வாழும் ஐயப்பா சரணம் சரணம் எங்கள் ஐயப்பா
எங்குருநாதன் பூஜையிலே நீ எழுந்தருளும் செய்க ஐயப்பா சரணம் சரணம் எங்கள் ஐயப்பா
மோகினி பாலா மாதவன் செல்வா மலைவிட்டு வருவாய் ஐயப்பா சரணம் சரணம் எங்கள் ஐயப்பா
வாகனமாய் எங்கள் நெஞ்சம் தந்தோம் வன்புலி எனவே ஏரப்பா ஐயப்பா சரணம் சரணம் எங்கள் ஐயப்பா
சின்மய ரூபா உன் மயமானோம் வந்தருள் தந்திடு ஜெயபாலா சரணம் சரணம் எங்கள் ஐயப்பா
அரைத்த சந்தனம் எடுத்து பூசுக சபைதான் மணக்க ஐயப்பா சரணம் சரணம் எங்கள் ஐயப்பா
புஷ்கலை தேவா நிஷ்டையில் கூட உன் பெயர் தானே ஐயப்பா சரணம் சரணம் எங்கள் ஐயப்பா
அஷ்டலக்ஷ்மியின் அம்சம் கொண்டு அடியார் மணைவா ஐயப்பா சரணம் சரணம் எங்கள் ஐயப்பா
சமரசம் பேசும் சற்குரு நாதா  சடுதியில் வருக ஐயப்பா சரணம் சரணம் எங்கள் ஐயப்பா
நவரசமாய் பல சரணம்கலந்து மாலைகள் தருவோம் ஐயப்பா சரணம் சரணம் எங்கள் ஐயப்பா
அரிஹரசுதனே அடியவர் மனமே அறிவாய் வருவாய் (2)
ஓம் ஹரி ஓம் என பூதனாதமே தொழுவோம் (2)
பந்தளராஜா பரிமள வாசா கரிமலை வாழும் ஐயப்பா சரணம் சரணம் எங்கள் ஐயப்பா
எங்குருநாதன் பூஜையிலே நீ எழுந்தருளும் செய்க ஐயப்பா சரணம் சரணம் எங்கள் ஐயப்பா
வின்னவர் தேவா விஷ்னுவின் பாலா மனையகம் வருக ஐயப்பா சரணம் சரணம் எங்கள் ஐயப்பா
கண்மலர் திறந்து காத்திருந்தோமே காட்சியும் தருக ஐயப்பா சரணம் சரணம் எங்கள் ஐயப்பா
வானில் மின்னும் ஜோதி பொன்னே வாசல் வருவாய் ஐயப்பா சரணம் சரணம் எங்கள் ஐயப்பா
காணீ பொன்னும் களரிபழமும் ஏர்பாய் எங்கள் ஐயப்பா சரணம் சரணம் எங்கள் ஐயப்பா
சபரிபீடமே சரங்குத்தியாலே சடுதியில் வருக ஐயப்பா சரணம் சரணம் எங்கள் ஐயப்பா
சக்கரைபொங்கல் தருவது எங்கள் பொன்குரு சுவாமி ஐயப்பா சரணம் சரணம் எங்கள் ஐயப்பா
சன்னிதானமே சங்குநாதமெ  கன்னிகள் ஏக்கம் தானப்பா சரணம் சரணம் எங்கள் ஐயப்பா
அன்னதானமே ஏற்க வேண்டுமே அதனால் வருவாய் ஐயப்பா சரணம் சரணம் எங்கள் ஐயப்பா
அரிஹரசுதனே அடியவர் மனமே அறிவாய் வருவாய் (2)
ஓம் ஹரி ஓம் என பூதனாதமே தொழுவோம் (2)
பந்தளராஜா பரிமள வாசா கரிமலை வாழும் ஐயப்பா சரணம் சரணம் எங்கள் ஐயப்பா
எங்குருநாதன் பூஜையிலே நீ எழுந்தருளும் செய்க ஐயப்பா சரணம் சரணம் எங்கள் ஐயப்பா
சச்சிதானந்தம் அம்பலதங்கம் வந்திட வேண்டும் எங்கள் ஐயப்பா சரணம் சரணம் எங்கள் ஐயப்பா
ஆனை புலிசிங்கம் வாழும் உனதங்கம் காட்டிட வேண்டும் ஐயப்பா சரணம் சரணம் எங்கள் ஐயப்பா
துஷ்ட சம்ஹார யானை மீதேரி கிட்ட வர வேண்டும் பகவானே சரணம் சரணம் எங்கள் ஐயப்பா
இட்டகட்டளை தட்ட வேண்டாமே உனக்கழகல்ல பகவானே ஐயப்பா சரணம் சரணம் எங்கள் ஐயப்பா
காலசாஸ்தாவே வேதசாஸ்தாவே ஓலைகுடிசை வர வேண்டும் சரணம் சரணம் எங்கள் ஐயப்பா
நீலஉடையோடு நீலிமலை ஏர உடல்பலம் இங்கே தர வேண்டும் ஐயப்பா சரணம் சரணம் எங்கள் ஐயப்பா
சென்னிமுடியேரும் கன்னிமலை காண உடனே வருவாய் ஐயப்பா சரணம் சரணம் எங்கள் ஐயப்பா
கட்டுமுடிகட்டும் காலம் மலரட்டும்  என்று உரைப்பாய் ஐயப்பா சரணம் சரணம் எங்கள் ஐயப்பா
அரிஹரசுதனே அடியவர் மனமே அறிவாய் வருவாய் (2)
ஓம் ஹரி ஓம் என பூதனாதமே தொழுவோம் (2)
சரணம் சரணம் ஸ்ரீ பூத நாதனே சரணம்
சரணம் சரணம் ஸ்ரீ சபரி நாதனே சரணம்

கட்டோட கட்டுமுடி

கட்டோட கட்டுமுடி பள்ளிகட்ட சுமந்தபடி சபரிமலை வாரொம் அப்பா ஐயப்பா
அய்யா உன் கட்டுமுடி சரணங்கள் சொன்னபடி சன்னிதானம் வாரொம் அப்பா ஐயப்பா
குருசாமி சொல்லுபடி குருபாதை நல்லவழி சபரிமலை வாரொம் அப்பா ஐயப்பா
எருமேலி வாசபடி விளயாட வேகபடி சன்னிதானம் வாரொம் அப்பா ஐயப்பா
கொட்டு முழக்கடிச்சி கோலாட்டம் போட்டபடி சபரிமலை வாரொம் அப்பா ஐயப்பா
பூதாதி பூதகனம் காவலுக்கு நின்னபடி சன்னிதானம் வாரொம் அப்பா ஐயப்பா
நந்தவன சாலைவழி நாதா உருவானபடி சபரிமலை வாரொம் அப்பா ஐயப்பா
சாமி அடிமேல் அடியெடுத்து அய்யா நீ சொன்னவழி  சன்னிதானம் வாரொம் அப்பா ஐயப்பா
தேகபலம் சுவாமி தந்திடனும் பாதபலம் சுவாமி தந்திடனும்
யாத்திரையாம் யாத்திரை சபரிமலை யாத்திரை
வில்லாளி வீரனே காக்க வேண்டும் எங்கல (2)
கட்டோட கட்டுமுடி பள்ளிகட்ட சுமந்தபடி சபரிமலை வாரொம் அப்பா ஐயப்பா
அய்யா உன் கட்டுமுடி சரணங்கள் சொன்னபடி சன்னிதானம் வாரொம் அப்பா ஐயப்பா
சாமியே சரணம் ஐயப்பா...
கட்டும் கட்டு பள்ளிகட்டு சபரிமலைக்கு
யாரை காண சாமியை காண சாமியை கண்டால் மோட்சம் கிட்டும்
மஹிஷி விழுந்த பள்ளம் மரியாதை செய்ய சொல்லும் சபரிமலை வாரொம் அப்பா ஐயப்பா
கல்போடும் குன்று மேல மகிழ்ச்சியாக கல் எறிந்து சன்னிதானம் வாரொம் அப்பா ஐயப்பா
அயிலேலோ ஏத்தமுங்கோ அழுதமலை உசரமுங்கோ சபரிமலை வாரொம் அப்பா ஐயப்பா
அழுது தொழுதபடி உச்சியிலே ஏறியாடி சன்னிதானம் வாரொம் அப்பா ஐயப்பா
பாறையிலும் முழுபாற கோட்டயில இளைப்பாற சபரிமலை வாரொம் அப்பா ஐயப்பா
முக்குழியில் முள்ளு குத்த அக்கறையில் நீ துடிக்க சன்னிதானம் வாரொம் அப்பா ஐயப்பா
கட கடக்கும் காவலமாம் ஏற்றுவது உன் பலமாம் சபரிமலை வாரொம் அப்பா ஐயப்பா
சாமி கட்டகரிமலையாம் கண்ணீறு தன்மலையும் சன்னிதானம் வாரொம் அப்பா ஐயப்பா
தேகபலம் சுவாமி தந்திடனும் பாதபலம் சுவாமி தந்திடனும்
யாத்திரையாம் யாத்திரை சபரிமலை யாத்திரை
வில்லாளி வீரனே காக்க வேண்டும் எங்கல (2)
சாமி கட்டோட கட்டுமுடி பள்ளிகட்ட சுமந்தபடி சபரிமலை வாரொம் அப்பா ஐயப்பா
அய்யா உன் கட்டுமுடி சரணங்கள் சொன்னபடி சன்னிதானம் வாரொம் அப்பா ஐயப்பா
கரிமலயின் ஏற்றத்திலே ஐயா உன் கை பிடிச்சி சபரிமலை வாரொம் அப்பா ஐயப்பா
கரிமலயின் இறக்கத்திலே குருமிலகாய் உருண்டோடி சன்னிதானம் வாரொம் அப்பா ஐயப்பா
சுறுப்பா சுறுசுறுப்பா நடந்தாலே ஆனவட்டம் சபரிமலை வாரொம் அப்பா ஐயப்பா
ஆனவட்டம் தொட்டுவிட்டு பம்பைஆற்றில் பாதம்விட்டு சன்னிதானம் வாரொம் அப்பா ஐயப்பா
தலையாம் தலைமுழுகி பம்பையாலே புனிதமாகி சபரிமலை வாரொம் அப்பா ஐயப்பா
பம்பா விளக்கு விட்டு பசியாலே சோறும் விட்டு சன்னிதானம் வாரொம் அப்பா ஐயப்பா
கட்டான கட்டெடுத்து கன்னிமூலம் காய் கொடுத்து சபரிமலை வாரொம் அப்பா ஐயப்பா
சாமி இருந்தாரே நீலிமலை சபரியம்மா வாழும் மலை சன்னிதானம் வாரொம் அப்பா ஐயப்பா
தேகபலம் சுவாமி தந்திடனும் பாதபலம் சுவாமி தந்திடனும்
யாத்திரையாம் யாத்திரை சபரிமலை யாத்திரை
வில்லாளி வீரனே காக்க வேண்டும் எங்கல (2)
சாமி கட்டோட கட்டுமுடி பள்ளிகட்ட சுமந்தபடி சபரிமலை வாரொம் அப்பா ஐயப்பா
அய்யா உன் கட்டுமுடி சரணங்கள் சொன்னபடி சன்னிதானம் வாரொம் அப்பா ஐயப்பா
காலு வலுவலுக்க நீலிமலை மேலிழுக்க சபரிமலை வாரொம் அப்பா ஐயப்பா
பம்பா உன் கைத்தடியாம் கன்னிசாமி  தொளிருக்க சன்னிதானம் வாரொம் அப்பா ஐயப்பா
அப்பாச்சி மேடுவர அப்பானு மூச்சிவிட சபரிமலை வாரொம் அப்பா ஐயப்பா
இப்பாச்சி பள்ளத்துல தப்பாம மூண்டவிட்டு சன்னிதானம் வாரொம் அப்பா ஐயப்பா
பீடம் சபரிபீடம் தேங்காயும் ரெண்டுப்படும் சபரிமலை வாரொம் அப்பா ஐயப்பா
கொச்சி சரமும் குத்தி குடுகுடுனு ஓடிவந்து சன்னிதானம் வாரொம் அப்பா ஐயப்பா
சாமி படியாம் படியும் ஏற பரவசமே வந்து சேர சபரிமலை வாரொம் அப்பா ஐயப்பா
அய்யா நடை திறக்க ஆனந்தமாய் நீ சிரிக்க சன்னிதானம் வாரொம் அப்பா ஐயப்பா
வந்தோமப்பா தரிசனம் கண்டோமப்பா
சரணம் சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா

சன்னதியில் கட்டும் கட்டி


சன்னதியில் கட்டும் கட்டி...வந்தோமப்பா ஐயப்பா...
சபரிமலை காடுதேடி... வாரோமப்பா ஐயப்பா...
கட்டுமுடி ரெண்டு கட்டி...வந்தோமப்பா ஐயப்பா...
காந்தமலை ஜோதிகாண...வாரோமப்பா ஐயப்பா...
சபரிமலை பயணந்தானப்பா... சாமி வழித்துணையாவந்து சேரப்பா...
குருசாமி காலைத்தொட்டு...வந்தோமப்பா ஐயப்பா...
கூடியொரு சரணமிட்டு...வாரோமப்பா ஐயப்பா...
புலியேறும் உன்ன நெனச்சு...வந்தோமப்பா ஐயப்பா...
புல்லரிக்க சரணமிட்டு...வாரோமப்பா ஐயப்பா...
காந்தமலை ஜோதியானவா...எங்க காவலாக வந்து சேரப்பா...
(சன்னதியில் கட்டும் கட்டி..)
கார்த்திகையில் மாலையிட்டு...வந்தோமப்பா ஐயப்பா...
கனிவாக விரதம் வெச்சு...வாரோமப்பா ஐயப்பா...
மணி மணியா மாலையிட்டு...வந்தோமப்பா ஐயப்பா...
மார்கழியில் பூசை வெச்சு...வாரோமப்பா ஐயப்பா...
சபரிமலை பயணந்தானப்பா... சாமி வழித்துணையா வந்து சேரப்பா...
குருசாமி சொன்னபடி...வந்தோமப்பா ஐயப்பா...
கூடி நல்ல விரதம் வெச்சு...வாரோமப்பா ஐயப்பா...
கருப்பசாமி உன்ன நெனச்சு...வந்தோமப்பா ஐயப்பா...
கால மால பூச வெச்சு...வாரோமப்பா ஐயப்பா...
காந்தமலை ஜோதியானவா...எங்க காவலாக வந்து சேரப்பா...
(சன்னதியில் கட்டும் கட்டி..)
கருப்பு பச்ச ஆடை கட்டி...வந்தோமப்பா ஐயப்பா...
மனசுக்கொரு லாடங்கட்டி...வாரோமப்பா ஐயப்பா...
துளசியில மாலை கட்டி...வந்தோமப்பா ஐயப்பா...
சரண கோஷ பாட்டு கட்டி...வாரோமப்பா ஐயப்பா...
சபரிமலை பயணந்தானப்பா... சாமி வழித்துணையா வந்து சேரப்பா...
நீல வண்ண ஆடை கட்டி...வந்தோமப்பா ஐயப்பா...
நித்தம் உன மனசில் கட்டி...வாரோமப்பா ஐயப்பா...
நெய் போட்டு விளக்கேற்றி...வந்தோமப்பா ஐயப்பா...
நேரம் ஒரு பாட்டு கட்டி...வாரோமப்பா ஐயப்பா...
காந்தமலை ஜோதியானவா...எங்க காவலாக வந்து சேரப்பா...
(சன்னதியில் கட்டும் கட்டி..)
உத்தரவு வந்ததுன்னு....வந்தோமப்பா ஐயப்பா...
ஊருக்கெல்லாம் ஓலையிட்டு...வாரோமப்பா ஐயப்பா...
உச்சி மலை போறதுன்னு...வந்தோமப்பா ஐயப்பா...
உறவுக்கெல்லாம் ஓலையிட்டு...வாரோமப்பா ஐயப்பா...
சபரிமலை பயணந்தானப்பா... சாமி வழித்துணையா வந்து சேரப்பா...
மூத்ததொரு முடியுங்கட்ட...வந்தோமப்பா ஐயப்பா...
முத்திரையில் நெய் பிடிச்சு...வாரோமப்பா ஐயப்பா...
முன்னுமொரு கட்டுமிட்டு...வந்தோமப்பா ஐயப்பா...
பின்னுமொரு கட்டுமிட்டு...வாரோமப்பா ஐயப்பா...
காந்தமலை ஜோதியானவா...எங்க காவலாக வந்து சேரப்பா...
(சன்னதியில் கட்டும் கட்டி..)
வீட்டையெல்லாம் தான் மறந்து...வந்தோமப்பா ஐயப்பா...
காட்டை மட்டும் மனசில் வச்சு...வாரோமப்பா ஐயப்பா...
சொந்தமெல்லாம் தான் மறந்து...வந்தோமப்பா ஐயப்பா...
சோதி மட்டும் மனசில் வச்சுவாரோமப்பா ஐயப்பா...
சபரிமலை பயணந்தானப்பா... சாமி வழித்துணையா வந்து சேரப்பா...
வன்புலிபோல் வாகனத்தில்...வந்தோமப்பா ஐயப்பா...
வாலையாறு வழி கடந்து...வாரோமப்பா ஐயப்பா...
சேரநாடு தான் புகுந்து...வந்தோமப்பா ஐயப்பா...
சேருமிடம் தான் நினச்சு...வாரோமப்பா ஐயப்பா...
காந்தமலை ஜோதியானவா...எங்க காவலாக வந்து சேரப்பா...
(சன்னதியில் கட்டும் கட்டி..)
வழியில் பல ஆலயங்கள்...வந்தோமப்பா ஐயப்பா...
வணக்கம் பல சொல்லிக்கிட்டு...வாரோமப்பா ஐயப்பா...
பச்சபசேல் தோட்டமெல்லாம்...வந்தோமப்பா ஐயப்பா...
உந்தன் முகம் பாத்துக்கிட்டு...வாரோமப்பா ஐயப்பா...
சபரிமலை பயணந்தானப்பா... சாமி வழித்துணையா வந்து சேரப்பா...
கோட்டயத்த தான் கடந்து...வந்தோமப்பா ஐயப்பா...
கோட்ட வாசல் எருமேலி...வாரோமப்பா ஐயப்பா...
எருமேலி சீமையில...வந்தோமப்பா ஐயப்பா...
எறங்கி சும்மா பேட்ட துள்ள...வாரோமப்பா ஐயப்பா...
காந்தமலை ஜோதியானவா...எங்க காவலாக வந்து சேரப்பா...
(சன்னதியில் கட்டும் கட்டி..)
வாபருக்கு சலாம் போட்டு...வந்தோமப்பா ஐயப்பா...
வண்ணங்கள பூசிக்கிட்டு...வாரோமப்பா ஐயப்பா...
சரக்கோலு ஏந்திக்கிட்டு...வந்தோமப்பா ஐயப்பா...
சாயங்கள பூசிக்கிட்டு...வாரோமப்பா ஐயப்பா...
சபரிமலை பயணந்தானப்பா... சாமி வழித்துணையா வந்து சேரப்பா...
பச்சிலய கட்டிக்கிட்டு...வந்தோமப்பா ஐயப்பா...
மேளத்தாளம் கூட்டிக்கிட்டு...வாரோமப்பா ஐயப்பா...
திந்தக்கத்தோம் ஆடிக்கிட்டு...வந்தோமப்பா ஐயப்பா...
சாஸ்தா உனை வணங்கிப்புட்டு வாரோமப்பா ஐயப்பா...
காந்தமலை ஜோதியானவா...எங்க காவலாக வந்து சேரப்பா...
(சன்னதியில் கட்டும் கட்டி..)
பெருவழி தான் திறந்திருக்க...வந்தோமப்பா ஐயப்பா...
குருசாமி முன் நடத்த...வாரோமப்பா ஐயப்பா...
நந்தவனம் தான் வணங்கி...வந்தோமப்பா ஐயப்பா...
பொடிநடையா தான் நடந்து...வாரோமப்பா ஐயப்பா...
சபரிமலை பயணந்தானப்பா... சாமி வழித்துணையா வந்து சேரப்பா...
பேரூரு தோடு மேல...வந்தோமப்பா ஐயப்பா...
பொரி போட்டு பூசை பண்ணி...வாரோமப்பா ஐயப்பா...
கோட்டப்படி அத நெருங்கி...வந்தோமப்பா ஐயப்பா...
எற எடுத்து பூச பண்ணி...வாரோமப்பா ஐயப்பா...
காந்தமலை ஜோதியானவா...எங்க காவலாக வந்து சேரப்பா...
(சன்னதியில் கட்டும் கட்டி..)
சிவபெருமான் வந்த இடம்...வந்தோமப்பா ஐயப்பா...
சீர் மிகுந்த காள கட்டி...வாரோமப்பா ஐயப்பா...
காளகட்டி காயொடச்சு...வந்தோமப்பா ஐயப்பா...
அடுத்த அடி அழுத நதி...வாரோமப்பா ஐயப்பா...
சபரிமலை பயணந்தானப்பா...
சாமி வழித்துணையா வந்து சேரப்பா...
அழுதநதி தானறங்கி...வந்தோமப்பா ஐயப்பா...
ஆறுதலா தான் குளிச்சு...வாரோமப்பா ஐயப்பா...
அடியிலொர கல்லெடுத்து...வந்தோமப்பா ஐயப்பா...
ஆழிப்பூசை பண்ணிப்புட்டு...வாரோமப்பா ஐயப்பா...
காந்தமலை ஜோதியானவா...எங்க காவலாக வந்து சேரப்பா...
(சன்னதியில் கட்டும் கட்டி..)
அசராம சரணம் சொல்லி...வந்தோமப்பா ஐயப்பா...
அழுதமேடு அதிலேறி... வாரோமப்பா ஐயப்பா...
கல்லெடுத்து குன்றிலிட்டு...வந்தோமப்பா ஐயப்பா...
கனிவாக சரணம் சொல்லி...வாரோமப்பா ஐயப்பா...
சபரிமலை பயணந்தானப்பா...
சாமி வழித்துணையா வந்து சேரப்பா...
இஞ்சிப்பாற கோட்டையில...வந்தோமப்பா ஐயப்பா...
இருந்து ஒரு பூச பண்ணி...வாரோமப்பா ஐயப்பா...
உடும்பாற உச்சியில...வந்தோமப்பா ஐயப்பா...
உட்காந்து பூச பண்ணி...வாரோமப்பா ஐயப்பா...
காந்தமலை ஜோதியானவா...எங்க காவலாக வந்து சேரப்பா...
(சன்னதியில் கட்டும் கட்டி..)
மூச்சா முழு மூச்செடுத்து...வந்தோமப்பா ஐயப்பா...
முக்குழியும் தான் கடந்து...வாரோமப்பா ஐயப்பா...
பேச்சா உன் பேச்செடுத்து...வந்தோமப்பா ஐயப்பா...
பெரிய மலை கரி மலையும்...வாரோமப்பா ஐயப்பா...
சபரிமலை பயணந்தானப்பா...
சாமி வழித்துணையா வந்து சேரப்பா...
கடினமப்பா கரிமலையும்...வந்தோமப்பா ஐயப்பா...
கால்கடுக்க உச்சியேறி...வாரோமப்பா ஐயப்பா...
கிடுகிடுவென இறக்கமப்பா...வந்தோமப்பா ஐயப்பா...
குடுகுடுவென கீழிறங்கி...வாரோமப்பா ஐயப்பா...
காந்தமலை ஜோதியானவா...எங்க காவலாக வந்து சேரப்பா...
(சன்னதியில் கட்டும் கட்டி..)
சிறியான வட்டத்துல...வந்தோமப்பா ஐயப்பா...
சிலு சிலுன்னு காத்து வாங்கி...வாரோமப்பா ஐயப்பா...
களைப்புத்தீர ஓய்வெடுத்து...வந்தோமப்பா ஐயப்பா...
பாட்டெடுத்து சரணம் சொல்லி...வாரோமப்பா ஐயப்பா...
சபரிமலை பயணந்தானப்பா...
சாமி வழித்துணையா வந்து சேரப்பா...
பெரிய்ய உன் பேர் சொல்லி...வந்தோமப்பா ஐயப்பா...
பெரியான வட்டத்துல...வாரோமப்பா ஐயப்பா...
சலசலக்கும் பம்பையாறு...வந்தோமப்பா ஐயப்பா...
பெருவழிக்கு நன்றி சொல்லி...வாரோமப்பா ஐயப்பா...
காந்தமலை ஜோதியானவா...எங்க காவலாக வந்து சேரப்பா...
(சன்னதியில் கட்டும் கட்டி..)
பம்பையில தல முழுகி...வந்தோமப்பா ஐயப்பா...
பாவங்கள அதில் கழுவி...வாரோமப்பா ஐயப்பா...
அன்னதான படையலிட்டு...வந்தோமப்பா ஐயப்பா...
அழகழகா தீபமிட்டு...வாரோமப்பா ஐயப்பா...
சபரிமலை பயணந்தானப்பா...
சாமி வழித்துணையா வந்து சேரப்பா...
கன்னிமூல சன்னிதியில்...வந்தோமப்பா ஐயப்பா...
கணபதிய கைத்தொழுது...வாரோமப்பா ஐயப்பா...
அண்ணாந்தா நீலிமலை...  வந்தோமப்பா ஐயப்பா...
ஐயா உன் கை பிடிச்சு...வாரோமப்பா ஐயப்பா...
காந்தமலை ஜோதியானவா...எங்க காவலாக வந்து சேரப்பா...
(சன்னதியில் கட்டும் கட்டி..)
நீலிமலை ஏத்தமேறி...வந்தோமப்பா ஐயப்பா...
அப்பாச்சி மேடு தொட்டு...வாரோமப்பா ஐயப்பா...
சபரிபீடம் காய் உடைச்சு...வந்தோமப்பா ஐயப்பா...
சரங்குத்தி அம்பு விட்டு...வாரோமப்பா ஐயப்பா...
சபரிமலை பயணந்தானப்பா...
சாமி வழித்துணையா வந்து சேரப்பா...
சன்னதிக்கு ஓட்டமாக...வந்தோமப்பா ஐயப்பா...
அம்பலத்தின் வாசலிலே...வாரோமப்பா ஐயப்பா...
பக்கமொரு காய் உடைச்சு...வந்தோமப்பா ஐயப்பா...
பதினெட்டு படியேறி...வாரோமப்பா ஐயப்பா...
காந்தமலை ஜோதியானவா...எங்க காவலாக வந்து சேரப்பா...
பதினெட்டு படியேறி...வந்தோமப்பா ஐயப்பா...
சாஸ்தா உன் முகம் காண...வாரோமப்பா ஐயப்பா...
ஐயா உன் நடை வாசல்...திறந்ததப்பா ஐயப்பா...
நெய்யாடும் திருமேனி...தெரியுதப்பா ஐயப்பா...
ஐயா உன் அழகு முகம்...தெரியுதப்பா ஐயப்பா...
ஆனந்தம் கண்ணீரா...பெருகுதப்பா ஐயப்பா...
அழகுமுகம் கண்டோம் ஐயப்பா...
நாங்க ஆனந்தமே கொண்டோம் ஐயப்பா...
பொன்னான திருமேனி...சாமி சரணம் ஐயப்பா...
கண்ணோடு கலக்குதப்பா...சரணம் சரணம் ஐயப்பா...
பார்க்க பார்க்க சலிக்காதே....சாமி சரணம் ஐயப்பா...
ஐயா உன் திருக்காட்சி....சரணம் சரணம் ஐயப்பா...
சாமி சரணம் சரணம் ஐயப்பா...
உந்தன் திருவடியே சரணம் ஐயப்பா...